Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாடு மேய்த்த தகராறு: வாலிபர் மீது வழக்கு

மாடு மேய்த்த தகராறு: வாலிபர் மீது வழக்கு

மாடு மேய்த்த தகராறு: வாலிபர் மீது வழக்கு

மாடு மேய்த்த தகராறு: வாலிபர் மீது வழக்கு

ADDED : ஜூன் 25, 2024 06:16 AM


Google News
தியாகதுருகம், : தியாகதுருகம் அருகே மாடு மேய்த்த தகராறில் விவசாயியை தாக்கிய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் அர்ஜூனன், 61; விவசாயி. இவர் தனது மாடுகளை உறவினர் சாந்தமூர்த்தியின் வயலில் மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த வேலாயுதம் மகன் முகுந்தகுமார், 23; என்பவர் தனது வயலின் வரப்பில் மாடுகளை மேய்ப்பதாக கூறி அர்ஜூனனை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின்படி தியாகதுருகம் போலீசார், முகுந்தகுமார் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us