Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு கல்லுாரியில் கலந்தாய்வு

அரசு கல்லுாரியில் கலந்தாய்வு

அரசு கல்லுாரியில் கலந்தாய்வு

அரசு கல்லுாரியில் கலந்தாய்வு

ADDED : ஜூன் 02, 2024 05:27 AM


Google News
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு வரும் 10ம் தேதி நடக்கிறது.

கல்லுாரி முதல்வர் மணிகண்டன் (பொறுப்பு) செய்திக்குறிப்பு:

அரியலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் செயல்படும் ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இளங்கலை முதலாமாண்டு வகுப்புகளில் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வு வரும் 10ம் தேதி துவங்குகிறது.

அதன்படி, 10ம் தேதி பி.ஏ., பொருளாதாரம், 11ம் தேதி பி.எஸ்சி., புள்ளியியல், கணினி அறிவியல் மற்றும் பி.ஏ., தமிழ், 12ம் தேதி பி.காம்., பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் தங்களது மாற்றுச்சான்றிதழ், 10ம் வகுப்பு பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச்சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படம், வங்கி புத்தகம் ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை எடுத்து வர வேண்டும்.

கலந்தாய்வு மூலம் சேரும் மாணவர்கள் சேர்க்கை கட்டணத்தை உடனடியாக செலுத்த வேண்டும். தாமதமாக வரும் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கபட மாட்டாது. சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியலை www.gascrishivandiyam.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us