/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வரத்து குறைவால் பருத்தி சந்தை ரத்து வரத்து குறைவால் பருத்தி சந்தை ரத்து
வரத்து குறைவால் பருத்தி சந்தை ரத்து
வரத்து குறைவால் பருத்தி சந்தை ரத்து
வரத்து குறைவால் பருத்தி சந்தை ரத்து
ADDED : ஜூன் 12, 2024 11:47 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் பஞ்சு மூட்டைகள் வரத்து குறைந்ததால் நேற்றைய பருத்தி வார சந்தை ரத்து செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி பருத்தி வார சந்தையில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் பஞ்சு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
தற்போது சீசன் முடியும் தருவாயில் இருப்பதால் பருத்தி மூட்டைகளின் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. குறைவான பஞ்சு மூட்டைகளே விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் வார சந்தையில் வர்த்தகம் தடை படுகிறது.
அதன்படி நேற்று சந்தைக்கு குறைவான மூட்டைகளே விற்பனைக்கு எடுத்து வரப்பட்டது. இதனால் நேற்றைய வர்த்தகம் ரத்து செய்யப்பட்டது.
வரும் டிசம்பர் மாதத்திலிருந்து பஞ்சு மூட்டைகளின் வரத்து மீண்டும் அதிகரிக்கும். அதுவரை பருத்தி வார சந்தையில் வர்த்தகம் அவ்வப்போது தடைபடும் எனவும் மேலாண் இயக்குனர் செந்தில் தெரிவித்தார்.