/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ டெண்டர் மனுக்கள் பெற அதிகாரிகள் இல்லாததால் ஒப்பந்ததாரர்கள் தர்ணா டெண்டர் மனுக்கள் பெற அதிகாரிகள் இல்லாததால் ஒப்பந்ததாரர்கள் தர்ணா
டெண்டர் மனுக்கள் பெற அதிகாரிகள் இல்லாததால் ஒப்பந்ததாரர்கள் தர்ணா
டெண்டர் மனுக்கள் பெற அதிகாரிகள் இல்லாததால் ஒப்பந்ததாரர்கள் தர்ணா
டெண்டர் மனுக்கள் பெற அதிகாரிகள் இல்லாததால் ஒப்பந்ததாரர்கள் தர்ணா
ADDED : ஜூலை 23, 2024 11:20 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் டெண்டர் மனுக்களுக்கான வரைவோலை பெற அதிகாரிகள் இல்லாததால் ஒப்பந்ததாரர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி நகராட்சியில் பல்வேறு ஒப்பந்த பணிகளுக்கான டெண்டர் மனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது. டெண்டர் மனுக்களுக்கான வரைவோலை அளிக்க நேற்று கடைசி தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஓப்பந்ததார்கள் பலரும் வங்கி வரைவோலையை அளிப்பதற்காக நகராட்சி அலுவலகத்திற்கு சென்றனர்.
ஆனால் அங்கு கமிஷனர் உள்ளிட்ட அதிகாரிகள் யாரும் அலுவலகத்தில் இல்லாததால் வரைவோலை கொடுக்க முடியாமல் தவித்தனர். நகராட்சி ஆணையரை மொபைல் போனில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு வெளியே உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ஏமாற்றமடைந்த 15க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மாலை 4:30 மணிக்கு நகராட்சி வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.