/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சின்னசேலம் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சின்னசேலம் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சின்னசேலம் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சின்னசேலம் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் சின்னசேலம் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 19, 2024 05:08 AM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் வட்டார பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் கலெக்டர் ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ், கலெக்டர் பிரசாந்த் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார். அம்மையகரம் வி.ஏ.ஓ., அலுவலகத்தில் கிராம கணக்குகள், இணைய வழியாக பதிவு செய்யப்பட்டுள்ள பட்டா மாறுதல், பட்டா திருத்தம் உள்ளிட்ட மனு நிலைகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஊராட்சி அலுவலகத்தில் பராமரிக்கப்படும் வீட்டு வரி, தண்ணீர் வரி ரசீது, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்க வழங்கப்படும் பணியாளர் அட்டை, வார்டு உறுப்பினர்கள் வருகை, கிராம சபை கூட்ட பதிவேடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஊராட்சி அலுவலகத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அரசு உயர்நிலைப் பள்ளியில் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு நடந்த பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். 6ம் வகுப்பு பிரிவில் மாணவர்களுடன் அமர்ந்து ஆசிரியரின் கற்பித்தல் திறன், மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்தார்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உரங்களின் இருப்பு நிலை, இ-சேவை மையத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் மற்றும் சேவைகள் குறித்து கேட்டறிந்தார். ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் செயல்பட்டு வரும் கிளை நுாலகத்தில் இருப்பில் உள்ள புத்தகங்கள், நுால் இரவல் பதிவேடு, வருகை பதிவேடுகளை ஆய்வு செய்தார்.
குழந்தைகள் நல மையத்தினை பார்வையிட்டார். மேல்நாரியப்பனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை ஆய்வு செய்த கலெக்டர் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்களின் வருகை பதிவுகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் இதர சேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
வி.கூட்ரோடு அருகே உள்ள ஆட்டு பண்ணையில் ஆய்வு செய்தார். தோட்டப்பாடி கிராமத்தில் அரசு மானியம் வழங்கியுள்ள 5.10 ஹெக்டர் எண்ணெய் பனை வளர்ப்பு வயல்களை பார்வையிட்டார். நயினார்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நபார்டு வங்கி உதவியுடன் 21 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட்டுமான பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது தாசில்தார் மனோஜ்முனியன், பி.டி.ஓ.,க்கள் செந்தில்முருகன், ரவிசங்கர் மற்றும் மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.