/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வடக்கனந்தல் அரசு விதை பண்ணையில் கலெக்டர் ஆய்வு வடக்கனந்தல் அரசு விதை பண்ணையில் கலெக்டர் ஆய்வு
வடக்கனந்தல் அரசு விதை பண்ணையில் கலெக்டர் ஆய்வு
வடக்கனந்தல் அரசு விதை பண்ணையில் கலெக்டர் ஆய்வு
வடக்கனந்தல் அரசு விதை பண்ணையில் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 13, 2024 04:43 PM

கள்ளக்குறிச்சி:
வடக்கனந்தல் அரசு விதை பண்ணையை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி அடுத்த வடக்கனந்தலில் உள்ள 47 ஏக்கர் பரப்பளவிலான மாநில அரசு விதைப் பண்ணை உள்ளது. இங்கு கடந்த 3 ஆண்டுகளில் ஒரு கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பில் 281.055 மெட்ரிக் டன் விதைகள் மற்றும் 77,800 எண்ணிக்கையில் தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் விதைகள் மற்றும் தென்னங்கன்றுகள் மாவட்டத்தில் உள்ள 8 வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கு அனுப்பப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த விதை பண்ணையின் செயல்பாடுகள் குறித்து கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கடந்த சொர்ணவாரி பருவ நெல் விதை பண்ணை, நொச்சி மற்றும் ஆடாதொடா நாற்றங்கால் வளர்ப்பு முறைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், முதல் பருவத்தில் பயிர் செய்ய உள்ள கருங்குறுவை நாற்றங்கால், விதை சுத்திகரிப்பு மையம், தென்னை நாற்றங்கால் மற்றும் விநியோகம் செய்யும் நிலையில் உள்ள கன்றுகளை பார்வையிட்டு உற்பத்தி மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து கேட்டறிந்தார். அதேபோல் பசுந்தாள் உரம் வயல்களையும் பார்வையிட்டார்.
மேலும், தமிழக அரசின் நெல் ஜெயராமன் பாரம்பரிய மரபு சார் இயக்கம் திட்டத்தின் கீழ் பாரம்பரிய நெல் ரகங்கள் துாயமல்லி, செங்கல்பட்டு சிறுமணி, பூங்கார், கருங்குருவை ஆகியவை அரசு விதைப்பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இதனை விவசாயிகள் உரிய முறையில் பெற்று பயன்படுத்தி வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
ஆய்வின் போது வேளாண்மை உதவி இயக்குனர் சத்தியபிரகாஷ், வேளாண்மை அலுவலர் (பண்ணை நிர்வாகம்) ராஜா, உதவி வேளாண் அலவலர் ராமச்சந்திரன் உட்பட அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் உடனிருந்தனர்.