/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அதிகாரிகள் கவனத்துடன் செயல்பட கலெக்டர் அட்வைஸ்: சங்கராபுரம் வட்டாரத்தில் திட்ட பணிகள் ஆய்வு அதிகாரிகள் கவனத்துடன் செயல்பட கலெக்டர் அட்வைஸ்: சங்கராபுரம் வட்டாரத்தில் திட்ட பணிகள் ஆய்வு
அதிகாரிகள் கவனத்துடன் செயல்பட கலெக்டர் அட்வைஸ்: சங்கராபுரம் வட்டாரத்தில் திட்ட பணிகள் ஆய்வு
அதிகாரிகள் கவனத்துடன் செயல்பட கலெக்டர் அட்வைஸ்: சங்கராபுரம் வட்டாரத்தில் திட்ட பணிகள் ஆய்வு
அதிகாரிகள் கவனத்துடன் செயல்பட கலெக்டர் அட்வைஸ்: சங்கராபுரம் வட்டாரத்தில் திட்ட பணிகள் ஆய்வு
ADDED : ஜூலை 25, 2024 06:42 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் வட்டார பகுதியில் திட்டப்பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் பிரசாந்த் பொதுமக்களின் சேவைப் பணிகளை செயல்படுத்துவதில் தனிகவனம் செலுத்தவேண்டும்என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சங்காராபுரம் வட்டாரம் தேவபாண்டலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பொதுப்பணித்துறை சார்பில் நபார்டு திட்டத்தின்கீழ் ரூ.84.72 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும், 4 வகுப்பறைகள் கொண்ட கட்டுமான பணிகளை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, சங்கராபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின்கீழ் ரூ.5.75 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் விபத்து சிகிச்சைப் பிரிவு, ரூ.1.89 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலக் கட்டட கட்டுமான பணி, பாச்சேரி அரசு பழங்குடியினர் நல உண்டு, உறைவிட உயர்நிலைப் பள்ளியில் ரூ.94.7 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் தங்கும் விடுதி மற்றும் வகுப்பறை கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
அப்போது, கட்டுமானத்திற்கு பயன்படுத்தும் பொருட்களின் தரம், பணி துவங்கிய நாள், முடிவடையும் நாள், திட்ட வரைபடம், உறுதித் தன்மை, உட்கட்டமைப்பு வசதிகள், திட்ட மதிப்பீடு ஆகியவற்றை கேட்டறிந்து பணிகளை விரைவாக முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அப்போது, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ராஜீவ், உதவி பொறியாளர் சத்தியப்பிரியா உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
சங்கராபுரம் அடுத்த வடசெட்டியந்தலில் விவசாயி செல்வராசுவின் நிலத்தில் திருந்திய நெல் சாகுபடி முறையில் ஒற்றை நாற்று நடவு இயந்திரத்தின் மூலம் நடவு செய்யும் முறையை கலெக்டர் பார்வையிட்டு, இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, மேலப்பட்டு கிராமத்தில் 'அ' -பதிவேடு உள்ளிட்ட கிராம கணக்குகளை பார்வையிட்டு, பட்டா மாற்றம் உரிய முறையில் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து, கிராம கணக்குகளை உரிய முறையில் பராமரிக்க அறிவுறுத்தினார்.
முன்னதாக, சங்கராபுரம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் வருவாய்த் துறை சான்றிதழ்கள், கோரிக்கை மனுக்கள் விபரம், ஆன்லைன் நிலுவை மனுக்கள், அலுவலகப் பதிவேடுகளை கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்து, அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு வழங்குவதில் அலுவலர்கள் தனிக்கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) விஜயராகவன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் தாசில்தார் சசிகலா, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கோபாலகிருஷ்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.