ADDED : ஜூன் 11, 2024 06:59 AM
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கிளீனர் இறந்தார்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி, 42; கிளீனரான இவர், மினி டெம்போவில் கோழிகளை இறக்கி விட்டு, சென்னையில் இருந்து திரும்பு கொண்டிருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு உளுந்தூர்பேட்டை தாலுகா பாதூர் அருகே டீ குடிப்பதற்காக மினி டெம்போவை நிறுத்திவிட்டு, சாலையை கடந்த பழனிச்சாமி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.