/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தேவாலய பணியாளர்கள் நலவாரிய உறுப்பினராவதற்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் பிரசாந்த் தகவல் தேவாலய பணியாளர்கள் நலவாரிய உறுப்பினராவதற்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் பிரசாந்த் தகவல்
தேவாலய பணியாளர்கள் நலவாரிய உறுப்பினராவதற்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் பிரசாந்த் தகவல்
தேவாலய பணியாளர்கள் நலவாரிய உறுப்பினராவதற்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் பிரசாந்த் தகவல்
தேவாலய பணியாளர்கள் நலவாரிய உறுப்பினராவதற்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் பிரசாந்த் தகவல்
ADDED : ஜூலை 09, 2024 11:28 PM
கள்ளக்குறிச்சி : கிறிஸ்துவ தேவாலயங்களில் பணிபுரிவோர் நல வாரிய உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்.
கலெக்டர் பிரசாந்த் செய்திகுறிப்பு:
தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்தவ அனாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்களின் சமூக பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்கு நல வாரியம் அமைப்படுகிறது.
இந்த நலவாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கு விண்ணப்ப படிவங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். மாவட்டத்தில் அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று, விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில் மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுபாட்டின் கீழ் இயங்கி வரும் அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்குவது போல் நலத்திட்டங்கள் வழங்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.