/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முதல்வர் ஸ்டாலின் கல்வியை கண்ணாக நினைக்கிறார்: அமைச்சர் பொன்முடி பேச்சு முதல்வர் ஸ்டாலின் கல்வியை கண்ணாக நினைக்கிறார்: அமைச்சர் பொன்முடி பேச்சு
முதல்வர் ஸ்டாலின் கல்வியை கண்ணாக நினைக்கிறார்: அமைச்சர் பொன்முடி பேச்சு
முதல்வர் ஸ்டாலின் கல்வியை கண்ணாக நினைக்கிறார்: அமைச்சர் பொன்முடி பேச்சு
முதல்வர் ஸ்டாலின் கல்வியை கண்ணாக நினைக்கிறார்: அமைச்சர் பொன்முடி பேச்சு
ADDED : ஜூன் 11, 2024 07:06 AM

திருக்கோவிலூர்: முகையூர் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சர் பொன்முடி மாணவிகளை இனிப்பு வழங்கி வரவேற்றார்.
தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக முகையூர் புனித ஜோசப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். அமைச்சர் பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி, வரவேற்று, விலையில்லா பாடப் புத்தகங்களை மாணவிகளுக்கு வழங்கி பேசியதாவது.
பள்ளிகள் திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு விலையில்லா பாட புத்தகங்களை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி இன்றைய தினமே அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு பாட புத்தகங்கள் வழங்கப்படுகிறது.
மறைந்த முதல்வர் கருணாநிதி தமிழகத்தில் கல்வித்துறையில் பெரும் வளர்ச்சியை ஏற்படுத்தினார். அதன் வழியில் முதல்வர் ஸ்டாலின் தனது இரு கண்களில் ஒரு கண்ணாக கல்வித்துறையை பாவித்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
குறிப்பாக மூன்று கிலோ மீட்டருக்கு ஒரு பள்ளி என்ற நிலை தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திற்கு ஒரு அரசு கல்லூரி, பொறியியல் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மதிய உணவு திட்டத்துடன், காலை உணவு திட்டம், புதுமைப்பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம் என மாணவர்களுக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்ற பொன்முடி பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட குழு சேர்மன் ஜெயச்சந்திரன், முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன், ஒன்றிய குழு சேர்மன் தனலட்சுமி உமேஸ்வரன், மாவட்ட ஊராட்சி குழு கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், ராஜீவ் காந்தி, பிரபு, ஒன்றிய கவுன்சிலர்கள் சிவா, ஜூலியட் மேரி, ஊராட்சி தலைவர்கள் ராமேஸ்வரம், லூயி, தலைமை ஆசிரியர்கள் மேரி இம்மாக்குலேட், பிரான்சிஸ்கா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.