ADDED : ஜூலை 30, 2024 06:30 AM
சின்னசேலம்: சின்னசேலம், வாசவி கிளப் மாவட்ட சதுரங்க மற்றும் இறகு பந்து விளையாட்டு போட்டி நடந்தது.
அரகண்டநல்லுார் லட்சுமி வித்யாலயா பள்ளியில் நடந்த போட்டியில், 70 மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். வாசவி கிளப் மாவட்ட ஆளுநர் ஆதிசேஷன் தலைமை தாங்கினார். செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். சேர்மன் ராஜா சுப்ரமணியன் வரவேற்றார். போட்டியை முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் சதீஷ்குமார் ,ஜெகதீசன் ஆகியோர் துவக்கி வைத்து பேசினர்.
தொடர்ந்து வெற்றி பெற்றவர்களுக்கு வாசவி கிளப் மாவட்ட ஆளுநர் ஆதிசேஷன் பரிசு வழங்கி கவுரவித்தார்.