/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பி.டி.ஓ.,க்கள் பணியிட மாற்றம்
ADDED : ஜூலை 07, 2024 04:25 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பி.டி.ஓ., நிலையில் பணிபுரியும் 6 அலுவலர்களை பணியிட மாற்றம் செய்தும், 2 பேருக்கு பதவி உயர்வு வழங்கியும் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பி.டி.ஓ., நிலையில் பணிபுரியும் 6 அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணிபுரிந்த சுமதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்திற்கும், திருக்கோவிலுாரில் பி.டி.ஓ., வாக பணிபுரிந்த மோகன்குமார், சங்கராபுரம் வட்டார ஊராட்சி பி.டி.ஓ., வாகவும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணிபுரிந்த செல்வபோதகர் சங்கராபுரம் கிராம ஊராட்சி பி.டி.ஓ.,வாகவும் மாற்றப்பட்டனர்.
அதேபோல், கள்ளக்குறிச்சி பி.டி.ஓ., வாக பணிபுரிந்த ரங்கராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் வீடுகள் மற்றும் சுகாதார பிரிவுக்கும், விடுப்பில் இருந்த பி.டி.ஓ., கஸ்துாரி, திருக்கோவிலுார் வட்டார ஊராட்சி பி.டி.ஓ.,வாகவும், பி.டி.ஓ., பூமா, கள்ளக்குறிச்சி வட்டார ஊராட்சி பி.டி.ஓ., வாகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
மேலும், துணை பி.டி.ஓ.,வாக சங்கராபுரத்தில் பணிபுரிந்த முருகனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, திருநாவலுார் வட்டார ஊராட்சி பி.டி.ஓ.,வாகவும், திருநாவலுாரில் பணிபுரியும் சந்திரசேகருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.