ADDED : ஜூன் 22, 2024 04:11 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது, பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவேடு, மாணவர்கள் விபரம், பள்ளியில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து பள்ளி ஆசிரியர்களிடையே பேசுகையில், 'இப்பள்ளி கடந்த 2023-24ம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் 86 சதவீதமும். பிளஸ் 1ல் 92 சதவீதமும், பிளஸ் 2வில் தேர்வில் 93 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளது. இந்த அளவு தேர்ச்சி சதவீதம் பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கு பாராட்டுகள். வரும் கல்வி ஆண்டில் பொதுத்தேர்வில் இப்பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற வேண்டும்' என்றார். தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.