/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மின் ஊழியர் மத்திய அமைப்பு; கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம் மின் ஊழியர் மத்திய அமைப்பு; கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்
மின் ஊழியர் மத்திய அமைப்பு; கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்
மின் ஊழியர் மத்திய அமைப்பு; கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்
மின் ஊழியர் மத்திய அமைப்பு; கள்ளக்குறிச்சியில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 19, 2024 01:07 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திற்கு முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் செந்தில், மாவட்ட பொருளாளர் வெங்கடேசன் முன்னிலை வைத்தனர். கணக்கீட்டு பிரிவில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல், மொபைல் செயலி மூலம் கணக்கீட்டு பணி மேற்கொள்ள போன் அல்லது டேப் வழங்குதல், மொபைல் டேட்டாவிற்கு மாதந்தோறும் ரூ.500 வழங்குதல், பல வருடங்களுக்கு முன் வழங்கப்பட்ட கணினி உள்ளிட்ட உபகரண பொருட்களை புதிதாக வழங்குதல், நெட்வொர்க் பிரச்னைகளை சரி செய்து விடாமல் அலைக்கழிப்பதை தவிர்த்தல், கணக்கீட்டு பிரிவு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பதவி உயர்வுகளை உடனடியாக வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.