Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு  செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு  செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு  செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு  செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு

ADDED : ஜூலை 02, 2024 06:28 AM


Google News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024-௨5ம் ஆண்டிற்கான காரீப் பருவத்தில் சாகுபடி செய்த சொர்ணவாரி-1 நெல் மற்றும் கம்பு பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் அசோக்குமார் செய்தி குறிப்பு : பயிர் காப்பீடு அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் காரீப் பருவத்தில் விவசாயிகள் தங்கள் பயிர்கள் இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் மகசூல் இழப்பிற்கு நஷ்ட ஈடு பெற்று வாழ்வாதாரத்தை மீட்கும் வகையில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இவ்வாண்டில் காரீப் பருவத்தில் அறிவிக்கை செய்யப்பட்ட பகுதிகளில் சொர்ணவாரி-1 நெல் பயிருக்கு ஜூலை 31 மற்றும் கம்பு பயிருக்கு ஆக.16 ஆகிய தேதி வரையில் விவசாயிகள் தங்கள் பயிருக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

காப்பீட்டுக் கட்டணம் ஏக்கருக்கு நெல் பயிர்-ரூ.651-, கம்பு பயிர் ரூ.215 ஆகும். காப்பீட்டுத் தொகையை பொது சேவை மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். அதற்கு தேவையான ஆவணங்கள், நடப்பு பருவ அடங்கல் (பசலி ஆண்டு 1434), சிட்டா, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் ஆதார் அட்டை ஆகியவையாகும்.

பதிவு செய்யும் போது விவசாயின் பெயர் மற்றும் விலாசம், நில பரப்பு, சர்வே எண் மற்றும் உட்பிரிவு, பயிரிட்டுள்ள நிலம் இருக்கும் கிராமம் ஆகிய விவரங்களை சரியாக கவனித்து பதிவு செய்து கொள்ளவும். எனவே பயிர் காப்பீடு திட்டத்தில் இணைந்து விவசாயிகள் பயன் பெற வேண்டும் என இணை இயக்குநர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us