/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ இரு தரப்பினர் மோதல் போலீசார் வழக்கு பதிவு இரு தரப்பினர் மோதல் போலீசார் வழக்கு பதிவு
இரு தரப்பினர் மோதல் போலீசார் வழக்கு பதிவு
இரு தரப்பினர் மோதல் போலீசார் வழக்கு பதிவு
இரு தரப்பினர் மோதல் போலீசார் வழக்கு பதிவு
ADDED : ஜூலை 18, 2024 05:07 AM
திருக்கோவிலூர் : மழைநீர் தேங்கியதை அகற்றும்போது ஏற்பட்ட தகராறில், இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
மணலூர்பேட்டை அடுத்த ஆதிதிருவரங்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் ராமச்சந்திரன், 45; ஊராட்சித் தலைவர்.
நேற்று காலை 8:00 மணி அளவில் திருவரங்கம், நடுத்தெரு, மண்டபம் பகுதியில் தேங்கியிருந்த மழை நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ராஜி மகன் ஆறுமுகம், 43; தான் வசிக்கும் பகுதியில் இருக்கும் தண்ணீரையும் அகற்றுமாறு கூறி ஊராட்சி தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது.
இதில் ஊராட்சித் தலைவர் ராமச்சந்திரனை, ஆறுமுகம் ஜாதி பெயரைச் சொல்லி திட்டி மிரட்டல் விடுத்தார். ராமச்சந்திரனும், ஆறுமுகத்தை திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.