Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சீர்மரபினருக்கு மத்திய அரசின் உதவி பெற விண்ணப்பம் வரவேற்பு

சீர்மரபினருக்கு மத்திய அரசின் உதவி பெற விண்ணப்பம் வரவேற்பு

சீர்மரபினருக்கு மத்திய அரசின் உதவி பெற விண்ணப்பம் வரவேற்பு

சீர்மரபினருக்கு மத்திய அரசின் உதவி பெற விண்ணப்பம் வரவேற்பு

ADDED : ஆக 02, 2024 02:26 AM


Google News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் மத்திய அரசின் உதவி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை மூலம் சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு 'சீட்' திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டம் மூலம் மத்திய, மாநில அரசுகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு தரமான பயிற்சி அளித்தல், சிறப்பு காப்பீட்டு திட்டம் அளித்தல், வாழ்வாதரங்களை எளிதாக்குதல். சமூக நிறுவனங்களின் சிறிய குழுக்களை உருவாக்க மற்றும் வலுப்படுத்த சமூக மட்டத்தில் வாழ்வாதாரத்திற்கான முயற்சியை எளிதாக்குதல். வீட்டு மனைப்பட்டா மற்றும் வீடுகள் கட்ட நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ளவர்கள் மத்திய அரசின் இணைய தளமான www.dwbdnc.dosje.gov.in என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், விபரங்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us