/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு ஆனித்திருமஞ்சனம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு ஆனித்திருமஞ்சனம்
செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு ஆனித்திருமஞ்சனம்
செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு ஆனித்திருமஞ்சனம்
செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு ஆனித்திருமஞ்சனம்
ADDED : ஜூலை 13, 2024 06:25 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் நடராஜருக்கு ஆனித்திருமஞ்சன சிறப்பு வழிபாடு நடந்தது.
கள்ளக்குறிச்சி சாமியார் மடம் செம்பொற்ஜோதிநாதர் கோவிலில் சிவகாமி அம்மை உடனுறை நடராஜருக்கு ஆனித்திருமஞ்சன சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது. சித்திரை மாதம் திருவோண நட்சத்திம், ஆனி மாத உத்திர நட்சத்திரம், ஆவணி மாத பூர்வபட்ச சதுர்த்தசி, புரட்டாசி மாத பூர்வபட்ச சதுர்த்தசி, மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரம், மாசி மாத பூர்வபட்ச சதுர்த்தசி என ஆண்டுக்கு 6 வழிபாடுகள் நடராஜருக்கு நடத்தப்படுவது வழக்கம். அதில் ஒன்றான ஆனித்திருமஞ்சன வழிபாட்டு தினமான நேற்று அதிகாலை திருவாசகம் முற்றோதல் துவங்கி, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
அபிஷேக, ஆராதனை செய்து, பன்னிரு திருமுறை விண்ணப்பித்து, மலர்களால் அலங்கரித்த நடராஜர், சிவகாமி அம்மை, மாணிக்க வாசகர் சுவாமிகளுக்கு பேரொளி வழிபாடு நடந்தது. சங்கு, கயிலை வாத்தியம், கஞ்சிரா, பிரம்மதாளம் வாசித்து பூஜைகள் நடத்தப்பட்டது.