/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம் வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனித்திருமஞ்சனம்
ADDED : ஜூலை 13, 2024 06:21 AM
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் ஆனி திருமஞ்சன விழா நடந்தது.
ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், நடராஜர் சபையில் வேத மந்திரங்கள் முழங்க சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு மகா அபி ஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.
நேற்று காலை 6:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகம், தீபாராதனை, கோவில் விழா மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் எழுந்தருளி சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து திருவூடல் வைபவம் நடந்தது.