/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
பத்ரகாளியம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம்
ADDED : ஜூலை 07, 2024 04:24 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பத்ரகாளியம்மன் கோவிலில் உலக அமைதிக்காகவும், தோஷ நிவர்த்திக்காகவும் ஆனி மாத அமாவாசையையொட்டி, சிறப்பு நிகும்பலா யாகம் நடந்தது.
இதையொட்டி, பத்ரகாளியம்மன் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேக ஆராதனை, ஊஞ்சல் தாலாட்டு நடந்தது.
கோவிலில் பெரியாண்டச்சி அம்மன், நாகாத்தம்மன், சக்தி அம்மன், காட்டேரி அம்மன் சுவாமிகளுக்கு மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து பத்ர காளி கவசம் பாடி, மிளகாய் வற்றல் கொண்டு யாகம் நடத்தினர்.
தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது