/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : ஜூன் 18, 2024 05:25 AM

சங்கராபுரம்: சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
சங்கராபுரம் அரசு ஆண்ககள் மேல்நிலைப் பள்ளியில் 1998-99ம் ஆண்டு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர்(பொ) ராமசாமி தலைமை தாங்கினார்.
இதில் மாணவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் பெரியசாமி, கோலக்காரன், மாரிமுத்து, ராசேந்திரன், தாமோதரன், பாஷா, ஆரோக்யசாமி, சுந்தரபாண்டியன், வைத்தியநாதன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து நினைவுபரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
முன்னாள் மாணவர்கள் பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.பின்னர் பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு செல்லும் வழியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் ரு.1 லட்சத்தில் இரும்பு நுழைவு வாயில் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்தது.