/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்கு புதுச்சேரி, சேலத்தில் 'அட்மிட்': விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காரணமா? கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்கு புதுச்சேரி, சேலத்தில் 'அட்மிட்': விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காரணமா?
கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்கு புதுச்சேரி, சேலத்தில் 'அட்மிட்': விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காரணமா?
கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்கு புதுச்சேரி, சேலத்தில் 'அட்மிட்': விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காரணமா?
கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்கு புதுச்சேரி, சேலத்தில் 'அட்மிட்': விக்கிரவாண்டி இடைத்தேர்தல் காரணமா?
ADDED : ஜூன் 20, 2024 03:53 AM
கள்ளக்குறிச்சி : விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் காரணமாக, கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கத்துக்கு அனுப்பி வைக்காமல், புதுச்சேரி மற்றும் சேலத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனரா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் 17 பேர் இறந்தனர். 70க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு சென்றனர். அவர்களில் பலர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பெரும் விபத்து போன்ற சம்பவங்களின்போது கள்ளக்குறிச்சியிலிருந்து விழுப்புரம் மற்றும் சேலம் அரசு மருத்துவமனைகளுக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைப்பது வழக்கம்.
ஆனால் நேற்று கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பாமல், புதுச்சேரி ஜிப்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அனல் பறக்கும் பிரசாரத்தில் ஆளும் கட்சி வேட்பாளர் உட்பட அனைத்து கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இத்தருணத்தில் மேல்சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தால், அங்கு மக்களின் கூட்டம் அலைமோதும்.
மேலும், மருத்துவமனையில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களை எதிர்கட்சி வேட்பாளர்கள் சந்தித்து ஆறுதல் கூறுவர்.
கள்ளச்சாராயம் பாதிப்பு தொடர்பாக தொகுதி மக்களிடையேயும் பரபரப்பாக பேசப்படும்.
இது, ஆளும் கட்சிக்கு அவப்பெயரை ஏற்படும் என்பதால் முண்டியம்பாக்கத்தை தவிர்த்து, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனரா என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது.