/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
ADDED : ஜூன் 03, 2024 05:00 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியது.
கலெக்டர் ஷ்ரவன்குமார் செய்திக்குறிப்பு:
அரசுப் பள்ளியில் 1 முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மருத்துவ நுழைவுத் தேர்வில் 7.5 சதவீதம் அளிக்கப்படுகிறது. மேலும், பெண் கல்வி இடைநிற்றலை தடுக்க மாணவிகளுக்கு உயர்கல்வி பயில மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.
எனவே, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி வரும் கல்வியாண்டில் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் 28 ஆரம்பப் பள்ளி, 12 நடுநிலைப்பள்ளி, 2 உயர்நிலைப் பள்ளி, 4 மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவ, மாணவியர்கள் பழங்குடியின உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்ந்து பயன்பெறலாம்.
மேலும், பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் சங்கராபுரம் வட்டத்தில் 2 பழங்குடியினர் நல விடுதிகள் மற்றும் ஒரு தொழிற்பயிற்சி விடுதியில் மாணவர்கள் சேர்ந்து அரசு நலத்திட்ட உதவிகளுடன் கல்வி கற்று பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.