Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாதவச்சேரியில் நடைபெற இருந்த பிரேத பரிசோதனை ஒத்திவைப்பு

மாதவச்சேரியில் நடைபெற இருந்த பிரேத பரிசோதனை ஒத்திவைப்பு

மாதவச்சேரியில் நடைபெற இருந்த பிரேத பரிசோதனை ஒத்திவைப்பு

மாதவச்சேரியில் நடைபெற இருந்த பிரேத பரிசோதனை ஒத்திவைப்பு

ADDED : ஜூன் 23, 2024 04:56 AM


Google News
கச்சிராயபாளையம்: மாதவச்சேரியில் சாராயம் குடித்து இறந்தவரின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் பணி ஒத்திவைக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி அடுத்த மாதவச்சேரியைச் சேர்ந்தவர் ஜெயமுருகன்,45; அய்யாதுரை மகன் இளையராஜா,33; இவரகள்், கடந்த 18ம் தேதி சாராயம் குடித்த நிலையில் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர்களின் ஜெயமுருகன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். இளையராஜா கடந்த 19ம் தேதி வீட்டிலேயே இறந்தார்.

உடன் ஜெயமுருகன் உடலை அவரது குடும்பத்தினர் உடனடியாக அடக்கம் செய்தனர். இளையராஜா உடலை அவரது குடும்பத்தினர் தகனம் செய்தனர். இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்படாததால், இருவரது இறப்பும் மாவட்ட நிர்வாகத்தின் கணக்கில் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரண தொகை தங்கள் குடும்பத்திற்கும் வழங்க வேண்டி இரு குடும்பத்தினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதனையொட்டி, புதைக்கப்பட்ட ஜெயமுருகன் உடலை, கலெக்டர் உத்தரவின் பேரில் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்வதற்கான முன்னேற்பாடு பணிகள் நேற்று நடந்தது. ஆனால், டாக்டர்கள் வராததால் பிரேத பரிசோதனை இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us