/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஆதிமூலநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம் ஆதிமூலநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம்
ஆதிமூலநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம்
ஆதிமூலநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம்
ஆதிமூலநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 19, 2024 11:05 PM
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அடுத்த பு.கொணலவாடி உமையம்மை உடனமர் ஆதிமூலநாதர் சுவாமி, மாரியம்மன், துர்க்கை அம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை 8:30 மணியளவில் 2ம் கால யாக பூஜைகள் துவங்கியது. புதிய விக்கிரங்களுக்கு கண் திறப்பு நிகழ்ச்சி, கன்னிகா பூஜை, பிரம்மச்சாரி பூஜை, தம்பதி பூஜை, தீபாராதனை நடந்தது. மாலை 6:30 மணியளவில் விசேஷசந்தி, 3ம் கால யாக பூஜைகள் துவங்கியது.
நேற்று காலை 7:00 மணியளவில் 4ம் கால யாக பூஜைகள் துவங்கியது. காலை 9:30 மணியளவில் யாத்திரை தானம், யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடந்தது.
காலை 10:00 மணியளவில் உமையம்மை உடனமர் ஆதிமூலநாதர் சுவாமி, மாரியம்மன், துர்க்கை அம்மன் திருக்கோவில் பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடந்தது.
ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.