ADDED : ஜூலை 26, 2024 04:39 AM
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த பாசார் கிராமத்தை சேர்ந்த மாணவிகள் சைக்கிளில் ரிஷிவந்தியம் அரசு மேல்நிலை பள்ளிக்கு சென்று கொண்டிருந்தனர். இதில் பிளஸ் 2 படிக்கும் மாணவி ஒருவரை அவ்வழியாக சென்ற பேரால் கிராமத்தை சேர்ந்த சுப்புராயன் மகன் கோவிந்தராஜ், 24; ரோட்டில் ஓரமாகப் போக மாட்டாயா என கேட்டு, ஆபாசமாக திட்டி தகராறில் செய்தார்.
இதுகுறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து கோவிந்தராஜை கைது செய்தனர்.