Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ முன் விரோத மோதல் 4 பேர் மீது வழக்கு

முன் விரோத மோதல் 4 பேர் மீது வழக்கு

முன் விரோத மோதல் 4 பேர் மீது வழக்கு

முன் விரோத மோதல் 4 பேர் மீது வழக்கு

ADDED : ஜூன் 12, 2024 07:21 AM


Google News
திருக்கோவிலூர் : மணலூர்பேட்டை அருகே நில பிரச்சினை தொடர்பான மோதலில் ஒருவரை தாக்கிய நான்கு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மணலூர்பேட்டை அடுத்த பள்ளிச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 60; அதே பகுதியைச் சேர்ந்தவர் காசி மகன் ராஜதுரை, 32; இருவருக்கும் இடையே நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. வெங்கடேசன் கடந்த 10 ம் தேதி தனது நிலத்தை ஜே.சி.பி., மூலம் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

அங்கு வந்த ராஜதுரை அவரது தாய் அமுதா, உறவினர்களான கண்ணன் மகன் ஆசைக்கண்ணு, 27; லலிதா, 52; ஆகியோர் வெங்கடேசனை திட்டித் தாக்கினர்.

இதுகுறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் நான்கு பேர் மீது மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us