/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ.1.21 கோடியில் 5 கட்டடங்கள் கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ.1.21 கோடியில் 5 கட்டடங்கள்
கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ.1.21 கோடியில் 5 கட்டடங்கள்
கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ.1.21 கோடியில் 5 கட்டடங்கள்
கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ.1.21 கோடியில் 5 கட்டடங்கள்
ADDED : மார் 12, 2025 12:58 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் ரூ. 1.21 கோடி மதிப்பிலான 5 புதிய கட்டடங்களை கலெக்டர், எம்.எல்.ஏ., திறந்து வைத்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த பால்ராம்பட்டில் 24 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலகம், கரடிசித்துார் ஊராட்சியில் 5 லட்சம் ரூபாயில் பல்நோக்கு கட்டடம், ரூ.44 லட்சத்தில், ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
மேலும் ரூ.39 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் ஊராட்சி செயலக கட்டடம், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 8 லட்சத்து 29 ஆயிரம் ரூபாயில் காலை சிற்றுண்டி கட்டடம் புதியதாக கட்டப்பட்டது.
இந்த புதிய கட்டடங்களின் திறப்பு விழாவிற்கு உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் முன்னிலை வகித்தார். கலெக்டர் பிரசாந்த் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார்.
பி.டி.ஒ.,க்கள் சங்கரன், சந்திரசேகரன், கூட்டுறவு சார் பதிவாளர் சக்திவேல், ஒன்றிய கவுன்சிலர் லலிதா அரவிந்தன், ஊராட்சி தலைவர்கள் தர்மலிங்கம், பெரியசாமி கலந்து கொண்டனர்.