/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.45.21 லட்சம் வர்த்தகம் கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.45.21 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.45.21 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.45.21 லட்சம் வர்த்தகம்
கள்ளக்குறிச்சி கமிட்டியில் ரூ.45.21 லட்சம் வர்த்தகம்
ADDED : ஜூன் 19, 2024 12:00 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 45.21 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டிக்கு, எள் 385 மூட்டை, மக்காச்சோளம் 350, சிவப்பு சோளம் 3, மணிலா மற்றும் ஆமணக்கு தலா ஒரு மூட்டை, நாட்டு கம்பு 5 மூட்டை என, மொத்தமாக 745 மூட்டை விளை பொருட்கள் விற்பனைக்கு வந்தன.
ஒரு மூட்டை எள் 10,373, மக்காச்சோளம் 2,458, சிவப்பு சோளம் 4,470, மணிலா 7,870, நாட்டு கம்பு 3,800, ஆமணக்கு 5,269 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.
கமிட்டியில் மொத்தமாக ரூ. 45 லட்சத்து 21 ஆயிரத்து 361 ரூபாய்க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.
தியாகதுருகம் மார்க்கெட் கமிட்டியில் எள் 30, நெல் 60, கம்பு 1, சோளம் 40 என, மொத்தமாக 131 மூட்டை விளைபொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. சராசரியாக ஒரு மூட்டை எள் 10,111, நெல் 1,899, கம்பு 3,101, சோளம் 2,417 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. மொத்தமாக ரூ.13 லட்சத்து 33 ஆயிரத்து 21 ரூபாய்க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.