/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது 4 ஊராட்சி மக்கள் எம்.எல்.ஏ.,விடம் மனு விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது 4 ஊராட்சி மக்கள் எம்.எல்.ஏ.,விடம் மனு
விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது 4 ஊராட்சி மக்கள் எம்.எல்.ஏ.,விடம் மனு
விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது 4 ஊராட்சி மக்கள் எம்.எல்.ஏ.,விடம் மனு
விவசாய நிலத்தை கையகப்படுத்தக் கூடாது 4 ஊராட்சி மக்கள் எம்.எல்.ஏ.,விடம் மனு
ADDED : ஜூலை 14, 2024 11:29 PM

தியாகதுருகம்: தியாகதுருகம் ஒன்றியத்தில் விவசாய நிலத்தை அரசு கையகப்படுத்தக் கூடாது என 4 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எம்.எல்.ஏ.,விடம் மனு அளித்தனர்.
தியாதுருகம் ஒன்றியம் எறஞ்சி, காச்சகுடி, கூந்தலுார், குருபீடபுரம் ஆகிய ஊராட்சி மக்கள் நேற்று வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ.,வை நேரில் சந்தித்து அளித்த மனு:
எங்கள் கிராமத்தில் தனியார் நிறுவனங்கள் தொழிற்சாலை அமைப்பதற்கு பட்டா நிலங்களை கையகப்படுத்துவதற்கான ஆயத்த பணிகளை அரசு அதிகாரிகள் துவக்கி உள்ளதாக தெரிகிறது.
நாங்கள் அனைவரும் விவசாய தொழிலை நம்பி வாழ்கிறோம். தொழிற்சாலைக்கு விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். அதனால் தொழிற்சாலையை அரசு தரிசு நிலங்களில் வேறு இடத்தில் அமைத்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மனுவைப் பெற்றுக் கொண்ட எம்.எல்.ஏ., பொதுமக்களை பாதிக்கும் எந்த திட்டத்தையும் அரசு செயல்படுத்தாது. இதனை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
மாவட்ட சேர்மன் புவனேஸ்வரி பெருமாள், ஒன்றிய சேர்மன் தாமோதரன், துணை சேர்மன் நெடுஞ்செழியன், ஆத்மா திட்ட தலைவர் அண்ணாதுரை உடன் இருந்தனர்.