Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தியாகதுருகம் பகுதியில் 4 நாட்கள் மின்தடை

தியாகதுருகம் பகுதியில் 4 நாட்கள் மின்தடை

தியாகதுருகம் பகுதியில் 4 நாட்கள் மின்தடை

தியாகதுருகம் பகுதியில் 4 நாட்கள் மின்தடை

ADDED : ஜூலை 02, 2024 11:21 PM


Google News
தியாகதுருகம், : தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் உயர் திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணி நடைபெற உள்ளதால் 4 நாட்கள் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருக்கோவிலுார் மின்வாரிய செயற்பொறியாளர் சுவாமிநாதன் செய்திக்குறிப்பு:

தியாகதுருகம் துணை மின் நிலையத்தில் தற்போதுள்ள 16 எம்.வி.ஏ., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மரை மாற்றி விட்டு புதிதாக 25 எம்.வி.ஏ., திறன் கொண்ட டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணி நடைபெற உள்ளது.

இப்பணி நாளை 4ம் தேதி காலை 8:00 மணி முதல் துவங்கி, 7ம் தேதி மாலை 5:00 மணி வரை நடைபெறும்.

இதற்காக தியாகதுருகம் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் ஊர்களுக்கு அருகில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் செய்ய மாற்று ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இத்தருணத்தில் மின் தடை ஏற்பட்ட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் பொறுத்துக் கொண்டு ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us