/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ 34 கிராமங்களில் கள்ளச்சாராய பாதிப்பு 34 கிராமங்களில் கள்ளச்சாராய பாதிப்பு
34 கிராமங்களில் கள்ளச்சாராய பாதிப்பு
34 கிராமங்களில் கள்ளச்சாராய பாதிப்பு
34 கிராமங்களில் கள்ளச்சாராய பாதிப்பு
ADDED : ஜூன் 22, 2024 04:17 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தால் 34 கிராமங்களை சேர்ந்தோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி பகுதியில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து 188 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதில் 50 பேர் இறந்தனர். மேலும் பலர் உடல் நிலை பாதிக்கப்பட்டு கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருணாபுரத்தில் மட்டுமே மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் மாதவச்சேரி, சேஷசமுத்திரம் ஆகிய பகுதியிலும் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்பனை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த மூன்று கிராமங்களில் இருந்து சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பலர் மெத்தனால் சாராயத்தை வாங்கிக் குடித்து பாதிப்புக்குள்ளாகியுள்ளது தெரியவந்தது.
அதில் அம்மையகரம், அம்மாபேட்டை, பங்காரம், தேவபாண்டலம், ஏமப்பேர், இந்திலி, க.மாமனந்தல், கச்சிராயபாளையம், கிழக்கு பாண்டலம், கூத்தக்குடி, மாடூர், மாமனந்தல், மாமந்துார், மேலபழவங்கூர், முடியனுார், நாகலுார், நெடுமானுார். பொற்படாக்குறிச்சி, சிறுவங்கூர், சங்கராபுரம் என 34க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது.