ADDED : ஆக 05, 2024 12:29 AM
கள்ளக்குறிச்சி: வரஞ்சரம் அருகே கஞ்சா வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்தவர்களை சோதனை செய்ததில், கஞ்சா வைத்திருந்தது தெரிந்தது.
விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம், மேட்டுபாளையத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் ஆகாஷ், 21; அரியலுார் மாவட்டம், இலுப்பையூர் பழனிவேல் மகன் பூபதி, 22; என்பது தெரியவந்தது. உடன் இருவர் மீதும் வழக்குப் பதிந்து, 20 கிராம் கஞ்சாவை பரிமுதல் செய்த கைது செய்தனர்.