/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சின்னசேலம் ஜமாபந்தியில் 125 கோரிக்கை மனுக்கள் சின்னசேலம் ஜமாபந்தியில் 125 கோரிக்கை மனுக்கள்
சின்னசேலம் ஜமாபந்தியில் 125 கோரிக்கை மனுக்கள்
சின்னசேலம் ஜமாபந்தியில் 125 கோரிக்கை மனுக்கள்
சின்னசேலம் ஜமாபந்தியில் 125 கோரிக்கை மனுக்கள்
ADDED : ஜூன் 14, 2024 07:02 AM

கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் நடந்த ஜமாபந்தியில் 125 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்திக்கு, கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கினார். நேற்று நடந்த வடக்கனந்தல் குறுவட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான ஜமாபந்தியில், பொதுமக்களிடமிருந்து பட்டா மாற்றம், வீட்டு மனைப்பட்டா, நில பட்டா, உட்பிரிவு பட்டா, மின் இணைப்பு சான்று, நில அளவை உள்ளிட்ட 125 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இதில் 5 பேரின் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது.
தொடர்ந்து நில அளவைக்கு பயன்படுத்தப்படும் நில அளவை சங்கிலி, நில அளவை நேர்கோணமானி உள்ளிட்ட நில அளவை பொருட்களை கலெக்டர் ஆய்வு செய்தார்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) ரமேஷ், நில அளவை உதவி இயக்குனர் கதிரவன், தாசில்தார்கள் கமலக்கண்ணன், அசோக், கமலம் மற்றும் துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.