Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்

ADDED : ஜூலை 14, 2024 04:08 AM


Google News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய்த் துறையில் தாசில்தார் அலகில் பணிபுரியும் 11 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, சின்னசேலத்தில் தாசில்தாராக பணிபுரிந்த கமலக்கண்ணன், கள்ளக்குறிச்சி தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராக பணிபுரிந்த பாலகுரு, வாணாபுரம் தாசில்தாராகவும் மாற்றம் செய்யப்பட்டனர்.

கள்ளக்குறிச்சி ஆலய நிலங்கள் தாசில்தாராக பணிபுரிந்த மனோஜ் முனியன் சின்னசேலம் தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நல தாசில்தாராக பணிபுரிந்த அனந்தகிருஷ்ணன், உளுந்துார்பேட்டை தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சியில் வன நிர்ணய அலுவலராக பணிபுரிந்த சசிகலா, சங்கராபுரம் தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல், சங்கராபுரத்தில் தாசில்தாராக பணிபுரிந்த கோபாலகிருஷ்ணன், அதே தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராகவும், உளுந்துபேட்டை தாசில்தார் விஜயபிரபாகரன், கள்ளக்குறிச்சி பேரிடர் மேலாண்மை தனி தாசில்தாராகவும் இடமாற்றம் செய்யப்பட்டடுள்ளனர்.

வாணாபுரம் தாசில்தார் குமரன், கள்ளக்குறிச்சி பொது அலுவலக மேலாளராகவும், சங்கராபுரம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்த சத்தியநாராயணன், கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நல தனி தாசில்தாராகவும், கள்ளக்குறிச்சியில் பொது அலுவலக மேலாளராக பணிபுரிந்த அனந்தசயனன், கள்ளக்குறிச்சி ஆலய நிலங்கள் தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும், கள்ளக்குறிச்சி தாசில்தார் பிரபாகரன், கள்ளக்குறிச்சி வன நிர்ணய அலுவலக தனி தாசில்தாராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us