/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு பாலிடெக்னிக் கல்லுரியில் தொழில்நெறி விழிப்புணர்வு நிகழ்ச்சி அரசு பாலிடெக்னிக் கல்லுரியில் தொழில்நெறி விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு பாலிடெக்னிக் கல்லுரியில் தொழில்நெறி விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு பாலிடெக்னிக் கல்லுரியில் தொழில்நெறி விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரசு பாலிடெக்னிக் கல்லுரியில் தொழில்நெறி விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 23, 2024 10:52 PM

சங்கராபுரம் : சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் தொழில்நெறி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்த தொழில்நெறி விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் சேட்டு தலைமை தாங்கினார்.
மாவட்ட தொழில்மைய உதவி பொறியாளர் சிவநாதன்,மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் முரளிதரன் முன்னிலை வகித்தனர். கல்லுாரி பொருளாளர் பாலு வரவேற்றார்.
புதிதாக தொழில் தொடங்குவது,அரசின் சலுகைகள், மாவட்ட தொழில் மையம் சார்பில் மானிய விவரம் பற்றியும், பாலி டெக்னிக் முடித்த பின்பு அரசு வேலை வாய்ப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் இளநிலை அலுவலர் செங்கதிர்,உதவி பயிற்றுனர் நசிர்,கல்லுாரி முதல்வரின் நேர்முக உதவியாளர் சரவணன்,மற்றும் துறை பேராசிரியர்கள்,துணை தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.