ADDED : ஜூலை 12, 2024 06:41 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் குருபூஜை நடந்தது.
உளுந்துார்பேட்டையில் தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோனின் 267 வது குருபூஜை நடந்தது.
மாநிலச் செயலாளர் ரவிசங்கர் தலைமை தாங்கினார்.
மாநில தொழில்நுட்ப அணி செயலாளர் வெங்கடேஷ், மாநில பண்பாட்டு கழக செயலாளர் முருகன், மாநில இளைஞரணி செயலாளர் அசோக்ராஜா, நகரத் தலைவர் ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் விஜய்ராஜன், நகர இளைஞரணி செயலாளர் ரஜினி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.