ADDED : ஜன 15, 2024 02:21 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா தேசிய இளைஞர் தின விழாவாக கொண்டாடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்ட சுவாமி விவேகானந்தர் தேசிய பேரவை சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார்.
சேவா பாரதி மாவட்ட தலைவர் சின்னதம்பி, ஆர்.எஸ்.எஸ்., மாவட்ட தலைவர் மகாதேவன் முன்னிலை வகித்தனர்.
சுவாமி விவேகானந்தர் சிலைக்கு மாலை அணிவித்து, பள்ளி மாணவர்கள் 150 பேர்களுக்கு நோட்டு, பேனா வழங்கப்பட்டது.
மேலும் மாணவர்கள் அனைவரும் விவேகானந்தரின் உயர் சிந்தனைகளை தினமும் எழுதுவதுடன், நமது வாழ்வியலில் அதனை செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
சுவாமி விவேகானந்தர் தேசிய பேரவை மாவட்ட செயலாளர் அரவிந்தன், ஆர்.எஸ்.எஸ்., நகர தலைவர் தாமோதரன், நிர்வாகிகள் மதனகோபாலன், சரவணக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதேபோன்று, எம்.ஆர்.என்., நகர், தென்கீரனுார் உள்ளிட்ட 13 இடங்களில் விவேகானந்தர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


