ADDED : மே 12, 2025 04:10 AM
காட்பாடி: காட்பாடி அருகே, கூலி தொழிலாளி கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டார்.
வேலுார், காட்பாடியை அடுத்த திருவலத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி அய்யப்பன், 35, திருமணமாகாதவர். விவசாய நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தார்.
அதே பகுதியை சேர்ந்த கணவனை இழந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதற்கு பெண்ணின் மகன் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்நிலையில் அய்யப்பன் நேற்று முன்தினம் இரவு, மது போதையில் வீட்டுக்கு வெளியே நின்றிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத கும்பல் அவர் மீது சரமாரியாக கற்களை வீசி சரமாரியாக தாக்கியதில், தலையில் பலத்த காயமடைந்து பலியானார். இதுகுறித்து திருவலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கள்ளக்காதல் விவகாரத்தில் அய்யப்பன் கொலை செய்யப்பட்டாரா என, விசாரித்து வருகின்றனர்.


