லாரி சக்கரம் ஏறியதில் தொழிலாளி பலி
லாரி சக்கரம் ஏறியதில் தொழிலாளி பலி
லாரி சக்கரம் ஏறியதில் தொழிலாளி பலி
ADDED : ஜூன் 27, 2025 01:03 AM
ஈரோடு, பூந்துறை சேமூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த குருசாமி மகன் சிவசங்கர்,38; கூலி தொழிலாளி. திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். கருத்து வேறுபாட்டால் சிவசங்கர் தனியே வாழ்ந்தார். நேற்று முன் தினம் மாலை சேமூர் நால்ரோடு பகுதியில், சைக்கிளில் ஏறும்போது நிலை தடுமாறி கீழே சாலையில் விழுந்தார்.
அப்போது பூந்துறையில் இருந்து எழுமாத்துார் நோக்கி வேகமாக வந்த லாரியின் முன் சக்கரம் சிவசங்கர் மீது ஏறி இறங்கியது. இதில் உடல் நசுங்கி அதே இடத்தில் பலியானார். அவரது உடலை கைபற்றி அறச்சலுார் போலீசார், லாரி டிரைவர் கந்தசாமியிடம் விசாரிக்கின்றனர்.