/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மனைவி, மகள் மாயம்; போலீசில் கணவன் புகார்மனைவி, மகள் மாயம்; போலீசில் கணவன் புகார்
மனைவி, மகள் மாயம்; போலீசில் கணவன் புகார்
மனைவி, மகள் மாயம்; போலீசில் கணவன் புகார்
மனைவி, மகள் மாயம்; போலீசில் கணவன் புகார்
ADDED : ஆக 03, 2024 06:52 AM
பவானி: சித்தோடு அருகே கரை எல்லப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக், 30; பெருந்துறை சிப்காட் தனியார் நிறுவன ஆப்பரேட்டர்.
இவரின் மனைவி அந்தியூர், ஜி.எஸ்.காலனியை சேர்ந்த காயத்ரி, 24; தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளன.வாழ்க்கை பிடிக்கவில்லை; தனக்கு பிடித்த வாழ்க்கை வாழப் போவதாக, கணவரிடம் காயத்ரி கூறி வந்துள்ளார். இந்நிலையில் கடந்த, 1ம் தேதி கார்த்தி வேலைக்கு சென்றவுடன், இரண்டாவது பெண் குழந்தையுடன் காயத்திரி வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.மனைவி, மகளை கண்டுபிடித்து தருமாறு, சித்தோடு போலீசில் கார்த்தி நேற்று புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு தாய், மகளை தேடி வருகின்றனர்.