/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு மார்க்கெட் சுங்க கட்டண வசூலை முறைப்படுத்த விக்கிரமராஜா வலியுறுத்தல் ஈரோடு மார்க்கெட் சுங்க கட்டண வசூலை முறைப்படுத்த விக்கிரமராஜா வலியுறுத்தல்
ஈரோடு மார்க்கெட் சுங்க கட்டண வசூலை முறைப்படுத்த விக்கிரமராஜா வலியுறுத்தல்
ஈரோடு மார்க்கெட் சுங்க கட்டண வசூலை முறைப்படுத்த விக்கிரமராஜா வலியுறுத்தல்
ஈரோடு மார்க்கெட் சுங்க கட்டண வசூலை முறைப்படுத்த விக்கிரமராஜா வலியுறுத்தல்
ADDED : ஜூன் 02, 2025 03:39 AM
ஈரோடு: ''ஈரோடு மார்க்கெட்டில் சுங்க கட்டண வசூல் முறையை முறைப்-படுத்த வேண்டும்,'' என்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர-மைப்பு தலைவர்
விக்கிரமராஜா கூறினார்.
ஈரோடு வ.உ.சி பூங்கா அருகே, ஈரோடு வெங்காயம் மற்றும் பழங்கள் மொத்த வணிகர் சங்க பெயர் பலகையை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நேற்று திறந்து வைத்தார். பிறகு அவர் கூறியதாவது:வணிகர் நல வாரியத்தில் வணிகர்களுக்கு இழப்பீட்டு தொகை, மூன்று லட்சம் ரூபாயில் இருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்-திய முதல்வருக்கு நன்றி. மே, ௫ம் தேதியை வணிகர் தின நாளாக அரசாணை அறிவிக்கப்பட்டதற்கு நன்றி. உள்ளாட்சி, நகராட்சிக-ளுக்கு வாடகை பிரச்னை, கட்டடங்களுக்கு வரி பிரச்னை உள்-ளிட்டவைகளுக்கு தீர்வு காணப்படும் என தெரிவித்துள்ளார். இது-குறித்து தலைமை செயலகத்தில் பேசப்பட்டு நல்ல முடிவு எடுக்க உள்ளோம்.
ஈரோடு மாவட்டத்தில் காய்கறி பழ தற்காலிக கடைகளுக்கு மட்-டுமே சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும். நிரந்தர கடைகளுக்கு சுங்க கட்டணம் வசூலிக்க கூடாதென்று, அரசாணை உள்ள நிலையில் சுங்க கட்டணம் வசூலிப்பதை, அரசு அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளது. இதை அரசு உடனடியாக முறைப-டுத்த வேண்டும். கலெக்டர் மற்றும் அமைச்சரிடம் இதுகுறித்து மனு அளிக்கப்பட்டுள்ளது. சுங்க கட்டணத்திற்கு ரசீதும் கொடுப்-பதில்லை. சுங்க வசூல் பிரச்னைக்கு தீர்வு காணவில்லையேல், ஈரோடு மாவட்டத்தில் இரண்டு நாள் தொடர் கடையடைப்பு நடத்தி, முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்வோம். தனியார் கட்டடங்களில் கடை நடத்துபவர்களுக்கு சுங்க கட்டணம் தேவை-யில்லை என அரசாணை உள்ளது. இதையும் மீறி வசூலிப்பது தேவையற்றது. டி-மார்ட் நிறுவனத்திடம் இருந்து எங்களை காப்-பாற்ற, தமிழக முதல்வரிடம் முறையிட உள்ளோம். தமிழக மளிகை கடைகளில் டி-மார்ட் கடைகளை விட குறைவான விலையில் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனம் தமிழகத்தின் வருமானத்தை சுரண்டிக்கொண்டிருக்கி-றது. இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ், நிர்வாகி
கள் செல்வம் உள்ளிட்டோர்
பங்கேற்றனர்.