Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் கட்டப்படுவது எப்போது?

அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் கட்டப்படுவது எப்போது?

அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் கட்டப்படுவது எப்போது?

அரசு மருத்துவமனையில் அம்மா உணவகம் கட்டப்படுவது எப்போது?

ADDED : ஜூலை 22, 2024 08:53 AM


Google News
ஈரோடு, : ஈரோடு அரசு அரசு தலைமை மருத்துவம-னையில், ஏழு ஆண்டுகளாக அம்மா உணவகம் செயல்பட்டது. இதனால் ஏழை நோயாளிகள், அவர்களது உறவினர்கள், கூலி தொழிலாளர் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

தலைமை மருத்துவமனை பின்புற பகுதியில் பன்னோக்கு மருத்துவமனை மைய கட்டடம் கட்டும் பணிக்காக கடந்த ஆண்டு அம்மா உணவ-கத்தை இடித்தனர். மருத்துவமனை வளாகத்தில் வேறொரு இடத்தில் கட்டுவதாக கூறினர். ஓராண்டுக்கு மேலாகியும் எந்தவித நடவடிக்-கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் நோயாளிகள், புறநோயாளிகள், அவர்களது உற-வினர்கள், கூலி தொழிலாளர்கள் அதிக பணம் கொடுத்து உணவு வாங்க வேண்டிய அவலநிலை உள்ளது. மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் எப்போது கட்டப்படும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, 'அம்மா உணவகம் கட்ட இடம் பார்க்கப்பட்டு வரப்படுகிறது. முடிவானதும் கட்டுமான பணி தொடங்கும' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us