/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வைகாசி மாத வளர்பிறை முகூர்த்தத்தால் கோவில்களில் களை கட்டிய திருமணம் வைகாசி மாத வளர்பிறை முகூர்த்தத்தால் கோவில்களில் களை கட்டிய திருமணம்
வைகாசி மாத வளர்பிறை முகூர்த்தத்தால் கோவில்களில் களை கட்டிய திருமணம்
வைகாசி மாத வளர்பிறை முகூர்த்தத்தால் கோவில்களில் களை கட்டிய திருமணம்
வைகாசி மாத வளர்பிறை முகூர்த்தத்தால் கோவில்களில் களை கட்டிய திருமணம்
ADDED : ஜூன் 09, 2025 04:07 AM
கோபி: வைகாசி மாத வளர்பிறை சுப முகூர்த்த தினமான நேற்று, கோபியில் பிரசித்தி பெற்ற பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் காலை 6:00 முதல், 7:00 மணிக்குள் ஏழு ஜோடிக-ளுக்கு திருமணம் நடந்தது. அதேபோல் பச்சைமலை முருகன் கோவிலில், அதிகாலை, 4:00 முதல், 7:00 மணிக்குள், 12 ஜோடி-களுக்கும், பளவமலை முருகன் கோவிலில், ஒரு ஜோடிக்கும் திரு-மணம் நடந்தது. ஒரே நாளில் மூன்று கோவில்களில், 20 திரு-மணம் நடந்தது. திருமணத்தில் பங்கேற்க படையெடுத்த உறவி-னர்களால், இந்த கோவில்கள் களை கட்டின. திரும்பிய பக்க-மெல்லாம் புதுமண ஜோடிகளும், பட்டுச்சேலை-புத்தாடைகளில் மக்களும் நடமாடியபடி இருந்தனர்.
சென்னிமலையில்...சென்னிமலை முருகன் கோவிலில் மலை கோவிலுக்கு செல்லும் சாலை மேம்பாட்டு பணி நடப்பதால், ஐந்து மாதங்க-ளுக்கு பிறகு திருமணம் நடைபெற நேற்று அனுமதிக்கப்பட்டது. வைகாசி மாத சுப முகூர்த்தம் என்பதால், 10 ஜோடிகளுக்கு திரு-மணம் நடக்க முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனால், 10 திரு-மண தம்பதியர் மற்றும் அவருடன் வந்த உறவினர்கள், மேள-தாளம், கேமராமேன் என கோவிலில் குவிந்தனர். இதனால் ஐந்து மாதங்களுக்கு பிறகு நேற்று தான் கோவில் வளாகம் களை-கட்டியது. திருக்கோவில் அர்ச்சகர்களும், பணியாளர்களும் நீண்ட நாட்களுக்கு பிறகு பரபரப்பாக இயங்கினர்.