/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/'விவிபேட்' இயந்திரம் 'கப்சிப்' விழிப்புணர்வில் வியப்பு'விவிபேட்' இயந்திரம் 'கப்சிப்' விழிப்புணர்வில் வியப்பு
'விவிபேட்' இயந்திரம் 'கப்சிப்' விழிப்புணர்வில் வியப்பு
'விவிபேட்' இயந்திரம் 'கப்சிப்' விழிப்புணர்வில் வியப்பு
'விவிபேட்' இயந்திரம் 'கப்சிப்' விழிப்புணர்வில் வியப்பு
ADDED : ஜன 03, 2024 11:53 AM
அந்தியூர்: ஈரோடு மாவட்டத்தில் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம், 'விவிபேட்' ஆகியவற்றை வைத்து, ஓட்டு போடுவது குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. இதன்படி அந்தியூர் தாலுகா அலுவலகத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. அந்தியூர் தாலுகா அலுவலகத்தில், நேற்று மின்னணு இயந்திரத்தில், வழக்கம்போல் மக்கள் மாதிரி ஓட்டுப்பதிவு செய்தனர். அப்போது 'விவிபேட்'
இயந்திரத்தில் இருந்து எந்த சத்தமும் வரவில்லை. இதனால் மாதிரி ஓட்டு போட்டவர்கள் குழப்பம் அடைந்தனர்.
இதுகுறித்து தாலுகா அலுவலக அதிகாரிகளிடம், மக்கள் விபரம் கேட்டனர். 'சூரிய ஒளி பட்டு பட்டு 'விவிபேட்' இயந்திரம் பழுதாகி விட்டது. இயந்திரமும் காலாவதி ஆகி விட்டது.
கோபி ஆர்.டி.ஓ., அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. வரும், 25ம் தேதிக்குப் பிறகு, அந்தந்த பகுதிகளுக்கே கொண்டு சென்று, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்' என்றனர்.