Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சுயம்பு நாகர் ஆலயத்தில் விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா

சுயம்பு நாகர் ஆலயத்தில் விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா

சுயம்பு நாகர் ஆலயத்தில் விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா

சுயம்பு நாகர் ஆலயத்தில் விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா

ADDED : செப் 18, 2025 01:36 AM


Google News
ஈரோடு, ஈரோடு, காரைவாய்க்கால் கரையில் அமைந்திருக்கும் சுயம்பு நாகர் ஆலயத்தில், விஸ்வபிரம்ம ஜெயந்தி விழா நேற்று நடந்தது. காலை 6:05 மணிக்கு விஸ்வகர்ம சுப்ரபாதத்துடன் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து விஸ்வேஸ்வரர் பூஜை, விஸ்வகணபதி பூஜை, புண்யாகவாஜனம், கடஸ்தாபனம், விஸ்வர்ம ஸகஸ்ர நாம பாராயணம், விஸ்வகர்ம சூக்தம், அஷ்டகம், உபநித், வேத பாராயணம், அபிஷேகம் நடந்தது. பின்பு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

* அகில இந்திய விஸ்வகர்மா பேரவை, புன்செய் புளியம்பட்டி கிளை சார்பில், விஸ்வகர்மா ஜெயந்தி விழா நேற்று மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடந்தது. பின், பஸ் ஸ்டாண்ட் முன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டு, மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்பட்டன. மாவட்ட செயலாளர் மூர்த்தி உள்பட

நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us