/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காங்கேயத்தில் பல்வேறு திட்டப்பணிகள் துவக்கம் காங்கேயத்தில் பல்வேறு திட்டப்பணிகள் துவக்கம்
காங்கேயத்தில் பல்வேறு திட்டப்பணிகள் துவக்கம்
காங்கேயத்தில் பல்வேறு திட்டப்பணிகள் துவக்கம்
காங்கேயத்தில் பல்வேறு திட்டப்பணிகள் துவக்கம்
ADDED : ஜூன் 05, 2025 01:31 AM
காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தாலுகா, செங்கோடம்பாளையம் ஊராட்சியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.14.86 லட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளையும், முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், ரூ.99.69 லட்சம் மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளையும் நேற்று செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி தலைமை வகித்தார். மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அருள்ஜோதி, காங்கேயம் தாசில்தார் மோகனன், குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது: முதல்வர் ஸ்டாலின், பல திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். நகைக்கடன் தள்ளுபடி, 1,50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குதல், பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம், பள்ளிக் குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் உரிமைத் திட்டம் உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்கள் உள்ளன. இதை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு பேசினார்.