Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அடையாளம் தெரியாத வாலிபர் மரணம்

அடையாளம் தெரியாத வாலிபர் மரணம்

அடையாளம் தெரியாத வாலிபர் மரணம்

அடையாளம் தெரியாத வாலிபர் மரணம்

ADDED : ஜூலை 24, 2024 08:17 AM


Google News
ஈரோடு : ஈரோடு அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் காலை, ௩௫ வயது மதிக்கத்தக்க வாலிபர் வந்தார்.

ஈரோடு, சம்பத் நகரில் வசிப்பதாகவும், நவீன் கிருஷ்ணன், 35, என்றும் தெரிவித்தார். உடல் நிலை மோசமாகி விட்டதாகவும், சிகிச்சைக்கு வந்திருப்ப-தாகவும் கூறிய சில நிமிடங்களில் இறந்தார். இறந்த நபரின் இடது மார்பில் ஒரு புள்ளி மச்சம், இடது முழங்காலில் ஒரு காயத்தழும்பு இருந்தது. வாலிபர் குறிப்பிட்ட முகவரியில், வீரப்-பன்சத்திரம் போலீசார் விசாரித்தனர். ஆனால் அடையாளம் காண-முடியவில்லை. இறந்த நபர் குறித்து தகவல் அறிந்தால், 94981-01227 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us