ADDED : ஜூன் 28, 2025 07:38 AM
சத்தியமங்கலம் : கர்நாடகா மாநில பஸ்சில் குட்கா கடத்தி வந்த, கோபியை சேர்ந்த இரு பெண்கள் சிக்கினர்.
கர்நாடக மாநிலத்திலிருந்து அம்மாநில பஸ்சில் குட்கா கடத்தி வரப்படுவதாக சத்தி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து சத்தி பஸ் ஸ்டாண்டுக்கு, நேற்று மாலை வந்த கர்நாடகா அரசு பஸ்சில் சோதனை செய்தனர்.
இதில் ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த புவனேஸ்வரி,45, வசந்தமணி,47, ஆகியோர், இரண்டு பேக்குகளில், 20 கிலோ குட்கா பொருட்களை கொண்டு
வந்தது தெரிய வந்தது. குட்காவுடன் இருவரையும் கைது
செய்தனர்.