ADDED : ஜூன் 12, 2025 01:45 AM
தாராபுரம், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அடுத்த பஞ்சப்பட்டியை சேர்ந்த விவசாயி சுப்ரமணியன், 50. இவர் தனது தோட்டத்தில், 15க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, 6:00 மணியளவில் ஆடுகளை பட்டியில் அடைத்துவிட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு 1:00 மணியளவில் ஆடுகள் அலறும் சத்தம் கேட்டது.
அங்கு சென்று பார்த்தபோது, பட்டியில் இருந்த ஆடுகளை நாய்கள் கடித்துக் கொண்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக நாய்களை விரட்டிய போதும், நாய்கள் கடித்ததில் இரு ஆடுகள் உயிரிழந்தன. இச்சம்பவம், அப்பகுதி கால்நடை விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.